மாட்டு வியாபாரியிடமிருந்து ரூ. 1.4 லட்சம் பறிமுதல்!

பள்ளிகொண்டா சுங்கச்சாவடி பகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 1.4 பணத்தை மாட்டு வியாபாரியிடம் இருந்து பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2024-04-03 02:02 GMT

பறக்கும் படை

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே பறக்கும் படையினர் தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த  மாட்டு  வியாபாரியிடம் உரிய ஆவணம் இல்லாததால் ரூ.1.4 லட்சம் பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணையில் அவர் வேலூர் அருகே உள்ள பொய்கை மாட்டுச் சந்தைக்கு சென்று மாடு வாங்க இருப்பதாகும் தெரிவித்தார். இதனை அடுத்து பறிமுதல் செய்த பணத்திற்கு ஆவணம் ஏதும் இல்லாததால் அதிகாரிகள் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News