திருமணம் ஆகாத விரக்தி - வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
அருமனை அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சமபவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Update: 2024-04-24 04:30 GMT
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பள்ளிக்கோணம் கும்பளத்துவிளை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி.இவரது மகன் பிரதீப்.கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. குடிப்பழக்கம் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இவர் திருமணம் ஆகாத விரக்தியில் வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவல் அறிந்த அருமனை போலீசார் சம்பவஇடம் சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து 'வருகின்றனர்.