விளை நிலங்களை பாதிக்காத வகையில் கெயில் திட்டம் - அமைச்சர் முத்துசாமி

கோவை-பெங்களூர் கெயில் திட்டத்தை விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Update: 2024-01-10 08:19 GMT

அமைச்சர் முத்துசாமி

ஈரோடு திண்டலில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய பின் தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தர்.

அப்போது அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் அதிமுக ஆட்சியில் திட்டம் தொடங்கும் இடத்திலிருந்து 3 பம்பிங் ஸ்டேஷனுக்கு நிலத்தை கூட கையகப்படுத்தவில்லை என்றும் அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு போடப்பட்ட பைப்கள் உடைந்தும் , மீட்டர் முறையாக அதிமுக ஆட்சியில் கண்காணிக்காததால் திருட்டு போயினதாகவும் , அதை தற்போது சரி செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அத்திகடவு-அவினாசி திட்டத்தின் கீழ் பயன்பெறும் குளங்களில் ஒருசில குளங்கள் மட்டும் சோதனை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய நிலைமை உள்ளதாகவும் , விரைவில் அத்திகடவு-அவினாசி திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் பேருந்துகள் இயங்கப்பட்டு வருவதாகவும் , கோவை-பெங்களூர் கெயில் திட்டம் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News