பணம் வைத்து சூதாட்டம் - 4 பேர் கைது
கள்ளப்பள்ளியில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-01-23 04:24 GMT
சூதாட்டம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை காவல் எல்லைக்குட்பட்ட கள்ள பள்ளி பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில்சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கள்ள பள்ளி, கோட்டை களம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்த ரத்தினவேல், பன்னீர், ராஜா, காந்தி நகரை சேர்ந்த முருகானந்தம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும் ரூபாய் 100-யும் பறிமுதல் செய்தனர். பின்பு, நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.