திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.

Update: 2023-11-05 10:15 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா வரும் 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது.

தொடர்ந்து காலை 5.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை புறப்படும் நிகழ்ச்சி நடைபெகிறது. அதனைத்தொடர்ந்து காலை 07-30 மணிக்கு கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் மிக விமர்சையாக தொடங்குகிறது . அதனைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது.

கந்த சஷ்டி 2-ஆம் நாள் முதல் 5-ஆம் நாள் வரை திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் வரும் 18-ஆம் தேதி மாலை கோயில் கடற்கரை வாளாகத்தில் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News