செய்துங்கநல்லூர் தர்க்காவில் கந்தூரி விழா

செய்துங்கநல்லூர் பீமா அம்மா மாகீன் அபுபக்கர் ஒலியுல்லா தர்க்காவில் கந்தூரி விழா நடந்தது.  

Update: 2023-12-29 16:28 GMT

செய்துங்கநல்லூர் பீமா அம்மா மாகீன் அபுபக்கர் ஒலியுல்லா தர்க்காவில் கந்தூரி விழா நடந்தது.  

முகம்மது நபி வழித்தோன்றலாய் உதித்து கேரள நாட்டில் சேவையாற்றி திருவனந்தபுரம் பூந்தூறையில் மக்களுக்கு நல் ஆசி  வழங்கிய ஒலியுல்லாக்கள் நினைவாக செய்துங்கநல்லூரில் இந்த தர்க்கா உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தர்க்காவில் 82 ஆம் ஆண்டு மத நல்லிணக்க கந்தூரி விழா நடந்தது. 

இதையொட்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு அரண்மனை கொடி ஊர் முழுவதும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு  ஏற்றப்பட்டது.  இந்த நிகழ்வில்  ஜோஸ் பள்ளி நிர்வாகி ஓ.பி.முஸ்தபா,  திமுக ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன்,   எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கால்வாய் பஞ்சாயத்து எழுத்தர் சுரேஷ், விவசாய சங்கதலைவர் ராஜ நாயகம்,  வி.கோவில்பத்து கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  மறுநாள் தப்ரூக் எனும் நேர்ச்சை வழங்கப்பட்டது.   முகைதீன் ஜாமியா பள்ளிவாசல் இமாம் ஹசன் ஞானியார் பைஜி, திருநெல்வேலி இமாம் சேக் அப்துல் காதிர் உஸ்மானி,  பீமா தர்கா அறங்காவலர் முகம்மது ராபி ரஷிதி,  சந்தை பக்கீர் மஸ்தான் தர்கா நிர்வாகி ஷேக் அசன் அலியார் சமதான் ஆகியோர்  திக்ரு மஜ்லீஸ் நடத்தினர்.  நிகழச்சி ஏற்பாடுகளை பீமா தர்கா விழா  குழுவின் பொறுப்பாளரும், செயலாளருமன கே.எஸ்.புகாரி தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News