வாலிபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

திருச்சியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-20 04:03 GMT

பைல் படம் 

திருச்சி சஞ்சீவி நகர் சென்னை பைபாஸ் சாலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை பறித்த வழக்கில் திருவானைக்கோவில் புதிய சேர்ந்த சக்திவேல் என்கிற சதீஷ் என்பவர் உட்பட ஐந்து பேரை கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் சக்திவேல் என்கிற சதீஷ் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதனால் அவருடைய தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சதீஷை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News