கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரில் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-13 16:20 GMT

கோப்பு படம் 

திருச்சி வள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரபு என்கின்ற பிரபாகரன் தனியார் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வந்தார். பிரபாகரன் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

சிறை சென்ற பிரபாகரன் நிபந்தனை பிணையில் வெளியே வந்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்த பிரபாகரனை கடந்த 11.12.23 ந்தேதி, நான்கு பேர் முகமூடி அணிந்து கொண்டு அவரது அலுவலகத்திற்குள் நுழைந்து சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இந்த வழக்கில் அரியமங்கலத்தை சேர்ந்த ரவுடி அப்பு (எ) ஹரி கிருஷ்ணன்,ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மற்றொரு குற்றவாளியான லெட்சுமணன் என்பவர் மீது அரியமங்கலம் காவல்நிலையத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக 3 வழக்குகளும், அடிதடி வழக்கு ஒன்றும்,

ஏர்போர்ட் காவல்நிலையத்தில் வழிப்பறி செய்ததாக ஒரு வழக்குகள் உட்பட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்தது. எனவே லெட்சுமணன் என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு மாநகர காவல் ஆணையர் காமினி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள லெட்சுமணன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News