கஞ்சா விற்றவர் கைது - 1 கிலோ பறிமுதல்
பெரம்பலூர் அருகே லப்பைக்குடிக்காடு பகுதியில் கஞ்சா விற்றவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை ஒழிக்கும் வகையில் சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மே 9-ம் தேதி பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் வினோத்கண்ணன் மற்றும் அவரது குழுவினர் லப்பைக்குடிக்காடு கிராம பகுதியில் சிறப்பு ரோந்து மேற்கொண்டபோது அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த லப்பைகுடிக்காடு ஜமாலியா நகர் பகுதியைச் சேர்ந்த உமர் பாரூக் மகன் நியாஸ் அகமது வயது(33) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபோன்று கஞ்சா, குட்கா மற்றும் கள்ளச்சாராயம் போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவலை அருகில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும். என காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது