கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
வேலூர் பூந்தோட்டம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-05-19 14:20 GMT
கஞ்சா விற்பனை செய்தவர் கைது
வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து, சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது.
விசாரணையில் அவர் சலவன்பேட்டையை சேர்ந்த முனிராஜ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முனிராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1,000 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.