தூத்துக்குடியில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் : வாலிபர் கைது
தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Update: 2024-06-20 12:05 GMT
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் செல்வராஜ் மற்றும் போலீசார் பீச் ரோடு பூங்கா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில், அவரது பையில் கஞ்சா பொட்டலம் வைத்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர், தூத்துக்குடி மூன்று சென்ட் அந்தோணியார் புரத்தை சேர்ந்த சங்கீதமணி மகன் முருகன் என்ற சிங்கம் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.