சூலூரில் வாகன சோதையின் போது சிக்கிய கஞ்சா விற்பனையாளர்கள்

சூலூரில் வாகன சோதையின் போது சிக்கிய கஞ்சா விற்பனையாளர்களிடம் இருந்து ஐந்து கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-06-17 15:58 GMT

கைது செய்யப்பட்டவர்கள் 

நீலாம்பூர் அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு வந்த நீலாம்பூர் பகுதியை சேர்ந்த சுந்தர ஜெகதீசன் (21) மற்றும் ஓடிசா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீராம் ரீனு ஐயுகா (28) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்பட்ட நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 93 நபர்கள் மீது 56 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து சுமார் 179.895 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News