கத்தியை காட்டி போலீசாரை மிரட்டிய கஞ்சா விற்பனை கும்பல் கைது

தூத்துக்குடியில் ஆட்டோவில் கஞ்சா வைத்து விற்பனை செய்த கஞ்சா கும்பலை போலீசார் சுற்றி வளைத்த போது அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Update: 2024-03-14 03:19 GMT

பைல் படம் 

தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்கு தெருவில் உள்ள பள்ளி அருகில் இருவர் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக முத்தையாபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் செந்தில்வேல் குமார், உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்த போது இருவரும் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

சிறிது நேரம் போராட்டத்திற்கு பின் அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் ஆட்டோவில் சோதனை செய்தபோது அதில் 300 கிராம் கஞ்சா இருப்பதைக் கண்ட போலீசார் ஆட்டோவுடன் சேர்த்து அவற்றை கைப்பற்றி 2 பேரையும் கைது செய்து தொடர்ந்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், அவர்கள் முத்தையாபுரம் சுந்தர்நகர் 1வது தெருவை சேர்ந்த முத்துக்குமார், மற்றும் சுந்தர்நகர் 4வது தெருவை சேர்ந்த முத்துராஜ் என்பதும் இவர்கள் மதுரையில் இருந்து கஞ்சா வியாபாரியிடம் கஞ்சா வாங்கி விற்பனை செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News