மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-15 07:00 GMT
கஞ்சா கடத்தல்
திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தெற்கு வாயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன்(26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடமிருந்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.