கஞ்சா கடத்தல் -அதிரடி காட்டிய காவல்துறையினர்
சீர்காழி அருகே கொள்ளிடம் சோதனை சாவடியில் கஞ்சா கடத்திய இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களின் காரையும் பறிமுதல் செய்தனர்.
Update: 2024-01-05 08:30 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தல்களின்படி சட்ட விரோதமாக பாண்டி சாராயம், கஞ்சா, மது விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 3.ம்தேதி நள்ளிரவு சீர்காழி மதுவிலக்கு காவலர்கள் மற்றும் தனிப்படை காவலர்கள் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தினர் கொள்ளிடம் சோதனை சாவடி அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது, அவ்வழியே வந்த நீல நிற Swift desire காரினை நிறுத்தி சோதனை செய்தபோது, காரினை ஓட்டி வந்த கடலூர் மாவட்டம், சிதம்பரம் வல்லம்படுகை சேர்ந்த நவீன் (25), விக்னேஷ் (22), ஆகியோரை விசாரனை செய்தும் காரில் இருந்த 1.100 கிலோ கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்தும், காரில் இருந்த இருவரையும் கைது செய்து, சீர்காழி மதுவிலக்கு பிரிவில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சிறப்பாக பணியாற்றிய காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.