அரகண்டநல்லூரில் கஞ்சா கடத்தல் - வாலிபர்கள் கைது.
அரகண்டநல்லூரில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா கடத்தி சென்ற இரு வாலிபர்கள் கைது செய்து சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் தென்பெண்ணையாற்று மேம்பாலம் அருகே போலீஸ் இன்ஸ் பெக்டர் சாகுல்ஹமீது தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் வந்த 2 வாலிபர்களும் சுமார் 2 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர் போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில் அவர்கள் அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் அந்திலி கிராமம் குளத்து மேட்டு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரேம்குமார் (வயது 24), திருக்கோவிலூர் தாலுகா வீரட்டகரம் கிராமம் குளத்து தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் கார்த்திகேயன்(24) என்பதும், கஞ்சா பொட்டலங்களை கடத்தி வரும்போது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது, இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளுடன் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். மேலும் கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? யாருக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.