பள்ளியில் குப்பை எரிப்பு - மாணவர்கள் அவதி

பள்ளியில் குப்பை எரிப்பு மாணவர்கள் அவதி. குப்பையை தீயிட்டு கொளுத்துவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

Update: 2024-04-09 16:38 GMT

குப்பை எரிப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1,300க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மரங்கள் அதிகளவில் உள்ளதால், இலைகள் உதிர்கின்றன. இந்த இலைகளை ஒன்று சேர்த்து பள்ளி வளாகத்திலேயே தீயிட்டு கொளுத்துகின்றனர். தற்போது, பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது. இப்பள்ளியில், தனித்தேர்வு எழுதும் மாணவர்கள், அப்பள்ளி மாணவியர் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வு நேரத்திலும் பள்ளி வளாகத்தில் இலைகள் மற்றும் குப்பைகள் கொட்டி, தேர்வு எழுதும் அறைகளுக்கு பக்கத்திலேயே பழுதடைந்த வகுப்பறையின் முன் தீ வைத்து கொளுத்துகின்றனர். அதிலிருந்து வெளியேறும் புகையால் மாணவர்கள் தேர்வு எழுவதற்கு கடும் சிரமப்படுகின்றனர். எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளி வளாகத்தில் குப்பையை தீயிட்டு கொளுத்துவதை தவிர்க்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News