சாலை ஓரங்களில் கொட்டப்படும் கழிவுகள்

கள்ளக்குறிச்சியில் வாகன போக்குவரத்து அதிகமான சாலையில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

Update: 2024-06-04 04:56 GMT

கள்ளக்குறிச்சியில் வாகன போக்குவரத்து அதிகமான சாலையில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். 

கள்ளக்குறிச்சியில் வாகன போக்குவரத்து மிகுதியான சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி வாகனங்கள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. ஏமப்பேர் நகரின் நுழைவுப் பகுதியில் சாலையோரம் இரவு நேரங்களில் அதிகளவிலான குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. மழைக் காலங்களில் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் கொட்டப்படும் குப்பைகள் அவ்வப்போது தீ வைத்தும் எரிக்கப்படுகிறது.

இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து மிகுதியான பிரதான சாலையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

Similar News