குபாரபாளையத்தில் குப்பைகளால் தீ விபத்து: பொதுமக்கள் கோரிக்கை

குமாரபாளையம் பவர் ஹவுஸ் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-01-30 14:54 GMT

கோப்பு படம் 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலை, குளத்துக்காடு பகுதியில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இதன் அருகே மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ள இடம் தட்டான்குட்டை ஊராட்சியை சேர்ந்தது.

இதன் எதிரில் நான்கு வீதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் குப்பாண்டபாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்தது. குப்பாண்டபாளையம் பகுதி குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள், இந்த மின்மாற்றியை சுற்றி குப்பைகளை மலை போல் குவித்து வருகிறார்கள்.

தட்டன்குட்டை ஊராட்சி நிர்வாகத்தினர் பல முறை சொல்லியும், குப்பை கொட்டக்கூடாது என போர்டு வைத்தும் பலனில்லை. மின் வாரியம் சார்பிலும் எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வழக்கம் போல் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். குப்பாண்டபாளையம் ஊராட்சி பகுதி மக்களால்,  

தட்டான்குட்டை ஊராட்சி நிர்வாகத்திற்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது. நேற்று இரவு 07:00 மணியளவில் இந்த மின்மாற்றி அருகே குவித்து வைத்த குப்பைகள் தீப்பிடித்து, மின்மாற்றியின்  உயரத்திற்கும் மேலாக தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் நகரின் அனைத்து மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது.

ஒரு மணி நேரமாக மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. அடிக்கடி இது போன்ற சம்பவங்களால் நகர் பகுதியில் உள்ள அனைவரும் மின் இணைப்பு இல்லாமல் துன்பத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

தீர்வு காணப்படாத பிரச்சனையாக இது இருந்து வருகிறது. மாவட்ட நிர்வாகத்தினர் இது குறித்து நடவடிக்கை எடுத்து, இங்கு  குப்பைகள் கொட்டாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

Similar News