விராலிமலை அருகே தோட்டத்தொழிலாளி மர்ம சாவு
விராலிமலை அருகே தோட்டத்தொழிலாளி மர்மான முறையில் இறந்துள்ளார்.;
காவல் நிலையம்
விராலிமலை அருகே உள்ள இலுப்பூர் தாலுகா ராப்பூசல் அம் பேத்கர் நகரை சேர்ந்தவர் அழகர்(63). விராலிமலை ஆசாரி தெருவில் வாடகை வீட்டில் கடந்த 2 ஆண் டுகளாக குடும்பத்துடன் தங்கி திருச்சி அருகே உள்ள தனியார் கல்லுலூரியில் தோட்ட வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டுக்கு அருகே சிறுநீர் கழிப்பதற்காக அழகர் வெளியே சென்றார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்த ஹரிஹரன் என் பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், மயங்கி விழுந்த அழகரை குடும்பத்தினர் மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அழகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகா ரின்பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.