தர்மபுரியில் பூண்டு விலை உயர்வு
தர்மபுரியில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது
தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன சுற்றுவட்டார பகுதியில் உற்பத்தி செய்யப்படும் அத்தியாவசிய காய்கறிகளை விவசாயிகள் நேரடியாக இங்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சூழலில் ஒரு சில காய்கறிகள் வெளி மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பூண்டு விளைகிறது. வட மாநிலங்களில் இருந்தும் தர்மபுரிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வரத்தை பொறுத்து சந்தைகள், கடைகளில் பூண்டின் விலை அதிகரிப்பதும், குறைவதும் வழக்கம். தர்மபுரி உழவர் சந்தைக்கு கடந்த சில நாட்களாக பூண்டு வரத்து குறைந்தது. இதனால் அதன் விலை அதிகரித்து வருகிறது.
நேற்று முன் தினம் தர்மபுரி உழவர் சந்தையில் 1கிலோ பூண்டு ரூ.230-க்கு விற்பனை செய்யப்பட்டது. பூண்டு வரத்து குறைந்ததால் 1 கிலோவிற்கு ரூ.10 அதிகரித்தது. தர்மபுரி உழவர் சந்தையில் இன்று 1 கிலோ ரூ.240-க்கு விற்பனையானது. வெளிமார்க்கெட்டுகளில் ரூ.260 வரை பூண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.