உழவர் சந்தையில் கணிசமாக விலை குறையும் பூண்டு
தர்மபுரி உழவர் சந்தையில் தொடர்ந்து விலை உச்சத்தில் இருந்து வந்த பூண்டின் விலை இன்று காலை நிலவரப்படி பூண்டு ஒரு கிலோ 240 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து இடங்களில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை துறைக்கு செயல்படும் உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றது இந்த அளவில் தர்மபுரி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வைக்கப்படும் அத்தியாவசிய காய்கறிகள் நேரடியாக உற்பத்தி செய்யப்படும் விவசாயிகள் மூலம் இங்கு கொண்டு வரப்பட்டு வேளாண்மை துறையால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஒரு சில மலைப் பெயர்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வரத்து சரிவால் பூண்டு விலை கடுமையாக உயர்ந்தது கடந்த வாரம் ஒரு கிலோ பூண்டு கிலோ 380 வரையில் விற்பனையான நிலையில் படிப்படியாக சரிந்து இன்று ஒரு கிலோ பூண்டு 240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது பூண்டு விலை கணிசமாக குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.