எரிவாயு தகனமேடை, சுற்றுச்சுவர் திறப்பு
சேலம் மாநகராட்சியில் புதிதாக துவக்கப்பட்ட எரிவாயு தகனமேடை, சுற்றுச்சுவர் திறப்பு விழா நடந்தது.
Update: 2024-06-17 08:56 GMT
சேலம் மாநகராட்சி 18-வது கோட்டத்திற்கு உட்பட்ட திருவாக்கவுண்டனூர் காசகாரனூர் பகுதியில் மயானம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். இதையடுத்து வேடிக்கவுண்டர் காலனியில் உள்ள சுடுகாட்டில் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து தகனமேடை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்து திறப்பு விழா நடந்தது. இதை அருள் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. பகுதி தலைவர் கணேசன், அ.தி.மு.க. 23-வது கோட்ட செயலாளர் கர்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.