எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

சங்கராபுரத்தில் இன்டேன் காஸ் நிறுவனத்தில் எரிவாயு விழிப்புணர்வு முகாம் நடந்தது.;

Update: 2024-01-11 05:43 GMT

சங்கராபுரத்தில் இன்டேன் காஸ் நிறுவனத்தில் எரிவாயு விழிப்புணர்வு முகாம் நடந்தது. 

சங்கராபுரத்தில் இன்டேன் காஸ் நிறுவனத்தில் எரிவாயு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுதர்சன் இன்டேன் காஸ் நிறுவணத்தில் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச உஜ்வாலா அடுப்பு வழங்கும் விழா நடந்தது. சங்கராபுரம் செல்வபிரபா மண்டபத்தில் நடந்த விழாவிற்கு காஸ் நிறுவண உரிமையாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன் முன்னிலை வகித்தனர். நிறுவன மேலாளர் பிரபாகரன் எரிவாயு பாதுகாப்பு குறித்து விளக்கி கூறினார். விழாவில் 150 பயனாளிகளுக்கு இலவச அடுப்பு வழங்கப்பட்டது. காசாளர் ராஜராஜன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News