11 வட்டங்களில் நாளை பொது விநியோகத்திட்ட குறைதீா் முகாம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் நாளை பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-09 08:29 GMT

 மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் 

திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் ஒரு கிராமத்தில் சனிக்கிழமையில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, வரும் சனிக்கிழமை 11 வட்டங்களில் குறைதீா் முகாம்கள் நடைபெறும். திருச்சி கிழக்கு வட்டத்தில் பொன்மலை-1, திருச்சி மேற்கு வட்டத்தில் தியாகராஜ நகா், திருவெறும்பூா் வட்டத்தில் கும்பக்குடி, திருவரங்கம் வட்டத்தில் உத்தமா்சீலி, மணப்பாறை வட்டத்தில் பொன்னம்பலப்பட்டி, முசிறி வட்டத்தில் வெள்ளூா், துறையூா் வட்டத்தில் அமுதம் அங்காடி-1, தொட்டியம் வட்டத்தில் அம்மன்குடி, மருங்காபுரி வட்டத்தில் கோட்டை பழுவஞ்சி, லால்குடி வட்டத்தில் ஆலங்குடி மகாஜனம், மண்ணச்சநல்லூா் வட்டத்தில் எஸ். கண்ணனூா் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறும். காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம். அந்தந்த வட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News