மாற்றுத்திறனாளிடம் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தீவிரம்
திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிடம் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவிற்கான பல்வேறு பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர் இந்நிலையில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் ஓட்டுகள் பெரும் பணி இன்றைய தினம் முதல் கட்டமாக தொடங்கியது.
இதில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 677 பேரும், மாற்றுத்திறனாளிகள் 336 பேர் என மொத்தம் 1013 தபால் ஓட்டுகள் பெறப்பட உள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரிவாக்கம் பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளியிடம் தபால் வாக்குகள் பெறுவதற்காக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் அவரது வீட்டிற்கே சென்று தபால் வாக்கினை பதிவு செய்ய வைத்தனர்.
தபால் வாக்கினை பதிவு செய்த மாற்றுத்திறனாளிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வாழ்த்து தெரிவித்தார். இரண்டாம் கட்டமாக தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.