கிருஷ்ணகிரி : பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்

Update: 2023-12-01 11:08 GMT

விழிப்புணர்வு மாரத்தான் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு (Beti Bachao Beti Padhao BBBP) திட்டம் குறித்த விழிப்புணர்வு - மாரத்தான் போட்டியை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (Beti Bachao Beti Padhao - BBBP) திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இம்மாரத்தான் போட்டி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் முதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 150 மாணவிகளும், கட்டிகானப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 250 மாணவர்கள் மற்றும் மாணவிகள் என மொத்தம் 400 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற முதல் 5 இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல விரிவாக்க அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்குமார், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) ஜெயந்தி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர், கட்டிகானப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், காவல்துறை, சமூகநல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்கள், குடும்ப வன்முறை பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் மற்றும் DHEW பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News