இளம்பெண் வரதட்சணை கொடுமை - 4 பேர் மீது வழக்குப்பதிவு
இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
By : King 24x7 Website
Update: 2023-12-04 06:50 GMT
சேலம் அரிசிபாளையம் ஆர். டி. பால் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகள் விக்னேஷ்வரி ராஜலட்சுமி (30) இவருக்கும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஆதீஷ் நாராயணன் என்பவருக்கும் இடையே கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது தங்கவேல் தனது மகளுக்கு 90 பவுன் நகையும், மருமகனுக்கு 10 பவுன் நகையும் வரதட்சணையாக கொடுத்துள்ளார். ஓராண்டிற்குள் விக்னேஷ்வரி ராஜலட்சுமிக்கு போடப்பட்ட 90 பவுன் நகையும் அவரது மாமியார் மங்கள ஈஸ்வரி வாங்கி வைத்துக் கொண்டுள்ளார். அத்துடன் இன்னும் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி விக்னேஸ்வரி ராஜலட்சுமியை அவரது கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். அடித்தும் துன்புறுத்தி உள்ளனர். இதனால் அவர் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த வரதட்சனை கொடுமை பற்றி சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் விக்னேஷ்வரி ராஜலட்சுமி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சசிகலா விசாரணை நடத்தி கணவர் ஆதிஷ் நாராயணன், மாமனார் ராதாகிருஷ்ணன், மாமியார் மங்களஈஸ்வரி, நாத்தனார் பார்கவி ஆகிய 4 பேர் மீது வரதட்சணை கொடுமை உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.