வெள்ளகோவிலில் சிறுமியை கடத்தி பலாத்காரம்: பேர் 2 கைது
வெள்ளகோவில் தேர் திருவிழாவில் பாட்டு கச்சேரி கேட்டுக்கொண்டிருந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோவில் தேர் திருவிழா கடந்த 08,09,10 ஆகிய தேதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது 2வது நாளான 09ம் தேதி மூலனூர் பகுதியை சேர்ந்த பெண் விவசாயி சாமி தரிசனம் செய்ய வெள்ளகோவில் வந்துள்ளார்.
அவருக்கு 17 வயதில் ஒரு மகள் தனியார் நிறுவனத்தில் படித்துக்கொண்டுள்ளார்.இந்நிலையில் படிக்கச்சென்று விட்டு வீடு திரும்பிய மாணவி தனது அம்மாவிற்கு போன் செய்துள்ளார். நான் வெள்ளகோவில் கோவிலுக்கு வந்ததாக தெரிவிக்கையில் மகளும் கிளம்பி வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோவிலுக்கு வந்துள்ளார்.
இருவரும் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு கோவில் வளாகத்தில் (நாட்டுப்புற இசைக்கலைஞர் மற்றும் டிவி புகழ் செந்தில் ராஜலக்ஷ்மி ) இசை கச்சேரி நடைபெற்றது.இதில் உணர்ச்சி வசப்பட்ட சிறுமியும் நடனமாடியுள்ளார். இந்த நிலையில் கூட்டத்தில் இருந்த 2 இளைஞர்கள் அந்த சிறுமியை தனியாக அழைத்துக்கொண்டு அவர்களது ஸ்கூட்டி அழைத்துக் கொண்டு சென்று ஆள் நடமாட்டம் இல்லாத காட்டிற்குள் உள்ள ஒருவீட்டில் வைத்து கற்பழித்ததாக தெரியவருகின்றது.
பின்னர் ஒரு இளைஞர் மட்டும் அந்த சிறுமியை தேர் கூட்டத்தில் விட்டுவிட வரும்போது பின் தொடர்ந்து வந்த வேறு இரண்டு இளைஞர்கள் மிரட்டி அவர்களது பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்று விட்டு பின்னர் காரில் கூட்டி சென்று கற்பழித்ததாகவும் பின்னர் மற்றொரு காரில் வேறு நபர்களுடன் தேர்கடையில் விட்டுவிட்டதாக சிறுமி தனது தாயாரிடம் கூறியதை தொடர்ந்து வெள்ளகோவில் காவல்துறை வழக்கு பதிவு செய்து 2 வரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தவேளையில் இன்று மேலும் 5 நபர்களை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் தேர் திருவிழாவில் பாட்டு கச்சேரி கேட்டுக்கொண்டிருந்த 17 வயது சிறுமியை கடத்தி கொண்டு சென்று கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றத்தில் வெள்ளகோவிலை சேர்ந்த உணவாக ஊழியர் பிரபாகரன் (32), மற்றும் தனியார் நிறுவன ஊழியர் மணிகண்டன் (32) ஆகியோரை சிறுமியை கடத்தி கற்பழிப்பு, கொலைமுயற்சி மற்றும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்த காங்கேயம் அனைத்து மகளிர் காவல்துறையினர்.
இவ்வழக்கில் மேலும் 5 நபர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காங்கேயத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கோவில் விழாவில் நடத்தப்பட்ட பாட்டுக்கச்சேரிக்கு உரிய அனுமதி வழங்கப்பட்டதை என கேள்வி எழுந்துள்ள நிலையில் பல்வேறு சமூக அமைப்பினரும் கோவில் திருவிழாவில் எப்படி பாட்டுக்கச்சேரிக்கு அனுமதி வழங்கப்பட்டது என சமூக வலைத்தளங்களில் கேள்விஎழுப்புவதுடன் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.