குமரி கடல் அலையில் சிக்கிய மாணவி பிணமாக மீட்பு

குமரி கடல் அலையில் சிக்கிய மேலும் ஒரு மாணவி பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2024-02-27 16:38 GMT
கடலில் சிக்கி உயிரிழந்த தர்ஷினி, சஜிதா

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை அருகே மேல சங்கரன்குழியை சேர்ந்தவர் முத்துக்குமார்  ஒரு மகள் சஜிதா என்பவர் ஆலங்கோட்டை அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.  இவருடன் அதே பகுதியை சேர்ந்த ரத்தினகுமார் மகள் தர்ஷினியும் படிக்கிறார்.   

  நேற்று முன்தினம்  மாலை சஜிதாவும்  தர்ஷினியும்  அருகில் உள்ள பிள்ளை தோப்பு மீனவர் கிராமத்தில் உள்ள தோழியை பார்க்க சென்றனர். பின்னர் மூன்று பேரும் கடற்கரைக்கு சென்றனர். கடற்கரையில் கிடந்த பல வடிவிலான சிப்பிகளை பார்த்த மாணவிகள் சிப்பிகளை சேகரித்துக் கொண்டிருந்தனர்.    

   அப்போது ராட்சத அலை ஒன்று அடித்ததில் இருவரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ள மீனவர்கள் ஓடி வந்து மாணவிகளை தேடினர். ஆனால் மாணவிகள் கிடைக்கவில்லை.        இது குறித்து குளச்சல் மரைன்  போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் அஜிதா சடலமாக மீட்கப்பட்டார். தர்ஷினி மாயமானார்.  அவரை நேற்று 2-வது நாளாக போலீசார், பொதுமக்கள்  தேடி வந்த நிலையில் கடலில் தர்ஷினி உடல் பிணமாக மிதந்தது. கடலோர பாதுகாப்பு போலீசார் உடலை மீட்டனர். 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News