பெண் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்
பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்
By : King 24x7 Website
Update: 2024-01-02 16:47 GMT
மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை தமிழக அரசு வழங்க உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் இலட்சத்திற்குள் இருக்க வேண்டும், தகுதியுள்ள மாணர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4,000/- கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 9 மற்றும் 10ஆம் வகுப்பில் பயிலும் மாணவியர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தனது பெரில் வங்கிகணக்கு துவங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். மேற்படி ஆதார் எண் மற்றும் வங்கி விபரங்களை தமது வருமானச் சான்று மற்றும் சாதிச்சான்று நகல்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் சமர்பிக்க வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், புதிய கட்டடம் 4-ம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.