தஞ்சாவூரில் ஜி.கே.வாசன் பரப்புரை

மேகேதாட்டுவில் அணை கட்ட திமுக அரசு மறைமுகமாக உதவுகிறது என ஜி.கே.வாசன் பேசினார்.

Update: 2024-04-17 08:51 GMT

மேகேதாட்டுவில் அணை கட்ட திமுக அரசு மறைமுகமாக உதவுகிறது என ஜி.கே.வாசன் பேசினார்.


மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு மறைமுகமாக திமுக உதவுகிறதோ என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். தஞ்சாவூரில் அவர், செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி பிரச்சினை என்பது டெல்டா விவசாயிகளுக்கு பயிர் பிரச்சினை மட்டுமல்ல, உயிர் பிரச்சினையும்கூட. தமிழகத்தில் நீர் பற்றாக்குறை இருந்தால், காவிரியில் நீரை பங்கீட்டு கொடுக்க வேண்டியது கர்நாடகா அரசின் கடமை. ஆனால், கர்நாடகா அரசு பிடிவாதம் பிடிப்பது, கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. குறிப்பாக, மேகேதாட்டுவில் அணை கட்டுவேன் என கர்நாடக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பேசி வருவதும், அதை இங்குள்ள திமுக, காங்கிரஸ் கட்சிகள் வேடிக்கைப் பார்ப்பதும் விவசாயிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போலத் தான், கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுக்க காங்கிரஸும், திமுகவும் காரணமாக இருந்தன. நாட்டின் வருங்கால வளர்ச்சிக்கு தேவையானதாக, பாஜக தேர்தல் அறிக்கை உள்ளது.

பெண்கள் இளைஞர்கள் வேலைவாய்ப்பில், வளர்ச்சியில் தனி அக்கறை காட்டியுள்ளனர். ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். 3-ஆவது முறையாக மோடி பிரதமராக வருவது அவசியம் என மக்கள் நினைக்கின்றனர். எனவே,தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் நிலையான ஆட்சி தேவை. கூட்டணிக்கு தலைமை தேவை. ஆளுமைமிக்க பிரதமர் தேவை. அவர் மோடியாக இருப்பது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. மத்தியில் பொருளாதாரம் வளர, இந்த ஆட்சி தொடர்வது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News