"50 அடி பள்ளத்தில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு"

காஞ்சிபுரம் அருகே 50 அடி பள்ளத்தில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு தீயணைப்புத் துறையினர்

Update: 2024-01-30 11:59 GMT

உயிருடன் மீட்கப்பட்ட ஆடு 

காஞ்சிபுரம் அடுத்த, சுருட்டல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி, ஆடுகள் வளர்த்துவருகிறார். நேற்று காலை வழக்கம்போல், அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒட்டியுள்ள பகுதியில் தன் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். கூட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று, பிற்பகல் 2:00 மணிக்கு வழி தவறி சென்று, கல்குவாரியில் 50 அடி ஆழ பள்ளத்தில், பாறையின் இடுக்கில் விழுந்து சிக்கிக் கொண்டது. வெளியேற முடியாமல் ஆடு கத்திக் கொண்டே இருந்தது. சத்தம் கேட்டு சென்ற விவசாயி ராமமூர்த்தி மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், ஆட்டை மீட்க முயன்றனர். கல்குவாரியில் மண் சரிவான பகுதி என்பதால், ஆட்டை மீட்க முடியவில்லை. பின், மாலை 4:00 மணிக்கு காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காஞ்சிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் 30 நிமிடம் போராடி, பாதுகாப்பு உபகரணம் வாயிலாக பாறையில் இடுக்கில் சிக்கிய ஆட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்."
Tags:    

Similar News