தர்மபுரியில் ஆடுகள் விற்பனை ஜோர்
தர்மபுரி நகராட்சி சந்தைப்பேட்டையில் ரூ.36 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.
Update: 2024-05-12 08:06 GMT
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம் இன்று காலை கூடிய சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். இதில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 300 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர் இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை ரூ.2000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 25 ஆயிரம் வரை விற்பனையானது. சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் இன்று 36 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்