கொங்கணாபுரம் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் நேற்று ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
Update: 2024-01-07 07:20 GMT
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கோழி,சேவல், ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் 10 கிலோ எடை கொண்ட ஆடு 5000 முதல் 7000 வரையிலும் 20 கிலோ எடை கொண்ட ஆடு பத்தாயிரம் முதல் 20000 வரையிலும் கோழி 500 முதல் 1000 வரையிலும் பந்தய சேவல் 2000 முதல் 6000 வரையிலும் விற்பனையானது. இதில் மூன்று கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.