பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை துவக்கம்

பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சலகங்களில் தங்கப் பத்திரம் வாங்க தங்கப்பத்திரம் வாங்க பிப்.16 கடைசி நாள் ஆகும்.

Update: 2024-02-15 08:19 GMT
தங்கப் பத்திரம்

இந்திய அஞ்சல் துறை சார்பில் பட்டுக்கோட்டை கோட்டத்தில் அனைத்து தபால் நிலை யங்களிலும் தங்கப்பத்திரம் விற்பனை திங்கள் கிழமை தொடங்கியுள்ளது. இது குறித்து பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் எஸ்.ரகுராமகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2023 - 24 ஆம் நிதியாண்டின் நான்காவது தொடர் தங்கப் பத்திரங்கள் விற்பனை பிப். 12 முதல் 16 வரை விற்பனை செய்யப்படுகிறது.1 கிராம் சுத்த தங்கத்தின் (24 கேரட்) விலை ரூ.6,263 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் 2.50 சதவீத ஆண்டு வட்டி அரையாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும்.

முதலீடு செய்த தேதியில் இருந்து 8 ஆண்டு கால முடிவில் முதிர்வுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் முதலீடு செய்த தேதியில் இருந்து 5 ஆண்டுக்குப் பிறகு வட்டி பெறும் தேதியிலும் இந்தத் தங்கப்பத்திரத்தை முன் முதிர்வு செய்து கொள்ளலாம். 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு கிராம் தங்கப் பத்திரம் ரூ 2,684 என்று முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு 2023-ஆம் ஆண்டு நவம் பர் மாதத்தில் ரூ. 6,132 திரும்பக் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News