வாணியம்பாடியில் ஐயப்பனுக்கு சொர்ண அலங்காரம்

வாணியம்பாடியில் ஐயப்பனுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் சொர்ண அலங்காரம் நடந்தது.;

Update: 2023-12-09 09:32 GMT

வாணியம்பாடியில் ஐயப்பனுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் சொர்ண அலங்காரம் நடந்தது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஶ்ரீ ஐயப்பன் சாமிக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் சொர்ண அலங்காரம்.

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் ஐயப்பன் நகரில் ஶ்ரீ ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஐயப்ப சுவாமி பக்தர்கள் இந்த கோவிலில் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். இந்த கோவிலில் கார்த்திகை மாதம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும்.

Advertisement

அந்த வகையில் சனிக்கிழமை தினமான இன்று ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஐயப்பன் சுவாமிக்கு ரூபாய்.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் சொர்ண அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஐயப்பன் கோவிலில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு பூஜையில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News