பள்ளி மாணவ மாணவிகளுக்கு தங்கம் பதக்கம் பரிசு
புளியங்குடியில் கீபோர்டு வாசித்தல் போட்டியில் பள்ளி மாணவ மாணவிகள் தங்கம் வென்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-20 07:03 GMT
பள்ளி மாணவ மாணவிகளுக்கு தங்கம் பதக்கம் பரிசு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடி தனியார் பள்ளி சிபிஎஸ்இ பள்ளி மாணவ மாணவிகள் கோவில்பட்டியில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு விளையாட்டு மற்றும் கலாச்சார அகாடமியின் 2வது தென்மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு கீபோர்டு வாசித்தல் போட்டியில் அழகு பிரகல்யா, தனன்யா, தரேணி ஆகியோர் தங்கப் பதக்கமும், அனுதர்ஷினி, அபிநயா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். இதில் வெற்றி பெற்றவர்களை பள்ளி நிர்வாகி பிரகாஷ் கண்ணா மற்றும் ஆசிரியர்களும் பள்ளி மாணவ மாணவிகளும் வெகுவாக பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.