ஸ்டாலின் பிறந்த நாளுக்கு தங்க மோதிரம்: தி.மு.க. மாவட்ட செயலாளர்
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தி.மு.க. மாவட்ட செயலர் தங்க மோதிரம் அணிவித்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-05 09:36 GMT
தங்க மோதிரம் அணிவித்த திமுக மாவட்ட செயலாளர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி தலைமை டாக்டர் பாரதி தலைமையில் நடந்தது. குமாரபாளையம் மேற்கு காலனியில் வசிக்கும் ரேணுகாதேவிக்கு பிறந்த ஆம் குழந்தைக்கும், காவேரி நகர் காயத்திரிக்கு பிறந்த பெண் குழந்தைக்கும் மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினார்.
குமாரபாளையம் நகராட்சி தலைவரும், வடக்கு நகர செயலருமான விஜய்கண்ணன், தெற்கு நகர கழக செயலர் ஞானசேகரன், நிர்வாகிகள் செந்தில், ரவி, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.