கோபுர கலசம் திருட்டு- போலீசார் விசாரணை

அரியலூர் அருகே குமிழியம் விநாயகர் கோவிலில் கோபுர கலசம் திருட்டு போனது குறித்து செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-01-19 06:15 GMT

காவல் நிலையம் 

அரியலூர் மாவட்டம் குமிழியம் கிராமத்தில் விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டு கும்பாபிஷேகம் நடத்தபட்டது. இந்நிலையில் இந்த திருக்கோவிலில் கோபுர கலசம் திருடு போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து செந்துறை காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோபுர கலசத்தின் மதிப்பு ஒரு லட்ச ரூபாய் இருக்கும் என தெரிவிக்கபட்டது குறிப்பிடதக்கது.
Tags:    

Similar News