சம்பா சாகுபடியில் குலைநோய் - கட்டுப்படுத்த ஆலோசனை
பொன்னமராவதியில் சம்பா சாகுபடியில் பரவும் குலைநோய்களை கட்டுப்படுத்த வேளாண்மை துறை சார்பில் ஆலோசனை வழங்கப்படுகிறது.
பொன்னமராவதி வட்டாரத்தில் 2100 எக்டேர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதென்றும். தற்போது வானிலை மேகமூட்டடமாகவும், குறைந்த வெப்பநிலையும் காணப்படுவதால் நெற்பயிரில் ஒரு சில பகுதிகளில் குலைநோய் தாக்குதல் தென்படுகிறது என்றும்.விவசாயிகள் இதை உரிய பரிந்துரைபடி கட்டுப்படுத்தலாம்.நாற்றங்காலில் தொடங்கி அனைத்து வளர்ச்சி பருவங்களிலும் குலைநோய் நெற்பயிரை தாக்குகிறது என்றும்.இலைகளின் மேல் பழுப்பு நிறத்தில் சாம்பல் நிற மைய பகுதியுடனும் காய்ந்த புள்ளிகள் காணப்படும்.
பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும் என்றும்.இந்த நோய் தீவிரமாக தாக்கும்போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிப்பதால் குலைநோய் எனப்படுகிறது என்றும். நெற்பயிரின் கழுத்துப் பகுதியில் நோய் தாக்கும்போது கறுப்பு நிறமாக மாறிக் கதிர்மணிகள் சுருங்கியும் கதிர்கள் உடைந்தும் தொங்கும் என்றும்.இது "கழுத்துக் குலைநோய்" எனப்படும். மேலாண்மை முறைகள் : குலைநோயைக் கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
நோயற்ற பயிரில் இருந்து விதைகளை தேர்வு செய்ய வேண்டும். நடவு வயலில் நோயற்ற நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.வயல் மற்றும் வரப்பில் உள்ள களைகளை அகற்ற வேண்டும். நோய் தாக்குதலை கட்டுப்படுத்த டிரைசைக்ளோசோல் 75 டபிள்யுபி என்ற மருந்து 200 கிராம் அல்லது அசோஸ்க்சிட்ரோபின் 23 எஸ்சி என்ற மருந்து 200 மில்லி. இதில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து கைதெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும், பூச்சிநோய் தாக்குதல் இருந்தால் உழவன் செயலியில் உள்ள பூச்சி நோய் கண்காணிப்பு என்ற அமைப்பின் மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பி பரிந்துரைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும்.கூடுதல் விபரங்களை பெற பொன்னமராவதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகலாம் என்று பொன்னமராவதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ரஹ்மத் நிஷா பேகம் தெரிவித்து உள்ளார்.