விபத்தில் உயிழந்தவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு தராததால் அரசு பேருந்து ஜப்தி

விபத்தில் உயிழந்தவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு தராததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2024-02-24 11:34 GMT

ஜப்தி செய்யப்பட்ட பேருந்து

கும்பகோணம் உள்ளூர், 3.வது தெரு, வெங்கடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஸ்ண மூர்த்தி 80 இவர் பால் எடுத்து கொண்டு மாயவரம் - கும்பகோனம் சாலையில் செட்டி மண்டபம் என்ற இடத்தில் கடந்த 10.1.2012ம் தேதி அண்டு சாலை ஓரம். நின்று கொண்டிருந்த போது, அப்போது அங்கு வந்த கும்பகோனம், அரசு போக்குவரத்து கழக பேருந்து, கிருஸ்ணமூர்த்தி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கிருஸ்ண மூர்த்தி உயிரிழந்தார் இதனை தொடர்ந்து , தாலுக்கா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர், இதுகுறித்து பெரம்பலூர் நீதிமன்றத்தில் உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ஜெயலட்சுமி, மகள், விஜய, மாலா, மகன் கணேசன், ஆகியோர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 9.1.2018ம் தேதி அன்று 4,81,750 ரூபாய் உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார், ஆனால் வெகு நாட்களாகியும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் நிறைவேற்று மனுத் தாக்கல் செய்ததை தொடர்ந்து,

பிப்ரவரி 23ஆம் தேதி இன்று அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்து செய்ய நீதிபதி உத்தரவிட்டார் அதனை தொடர்ந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான துறையூர் பணிமனை சேர்ந்த அரசு பேருந்தை அமீனா ஜெயலட்சுமி நோட்டீஸ் ஒட்டி ஜப்தி செய்து வாகனத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர்.

Tags:    

Similar News