சாலையின் நடுவே உள்ள குழியில் மாட்டிக் கொண்ட அரசு பேருந்து
மதுரையில் சாலையின் நடுவே உள்ள குழியில் மாட்டிக் கொண்ட அரசு பேருந்தால் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
. மதுரை பெரியார் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலை என்ன நேரமும் போக்குவரத்து அதிகம் உள்ள சாலை இந்த சாலையில் ஆங்காங்கே குண்டு குளியுமாக உள்ளது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் முன்பு உள்ள சாலையில் உள்ள குழியில் இன்று திருமங்கலத்தில் இருந்து எம்ஜிஆர் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த (TN58 N 1530) அரசு பேருந்து குழியில் மாட்டிக்கொண்டது.
சாலையின் நடுவே உள்ள குழியில் மாட்டிக் கொண்ட அரசு பேருந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு பள்ளத்தில் மாட்டிக் கொண்ட அரசு பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு, சாலையை குறை கூறுவதா பேருந்துயை குறை கூறுவதா என்று வேதனையுடன் கடந்து சென்ற வாகன ஓட்டிகள்.
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பல வழிகளில் முயற்சி செய்தும் பேருந்து அந்த குழியில் இருந்து நகரவே இல்லை இதனால் பேருந்தில் இருந்து பயணிகள் இறங்கி சென்றனர்.பின்னர் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட தொடங்கியது அதன் பிறகு காவலர்கள் வந்து போக்குவரத்தை சரி செய்ய தொடங்கினர். ஆனாலும் இன்று வைகாசி விசாகம் என்பதால் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து அழகு குத்தி பறவை காவடிகள் எடுத்து கூட்டம் கூட்டமாக பாதயாத்திரை ஆக அந்த பாதையில் செல்வதால் போக்குவரத்து பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை இதனால் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு அங்கு ஏற்பட்டது. மேலும் அந்த அரசு பேருந்து (செல்ஃப் ஸ்டார்ட்) என்பது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் வண்டியை தள்ள முயற்சித்தனர் ஆனால் பொதுமக்கள் யாரும் முன் வராததால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மட்டும் பேருந்து தள்ள முடியாததால் மற்றொரு வாகனத்தைக் கொண்டு அந்த பேருந்தை வெளியே எடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்று அங்கிருந்து விலகிச் சென்றனர். போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவலர்களின் முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக போக்குவரத்து பின் சரி செய்யப்பட்டது ஓட்டை உடைசலை அங்குட்டு கொண்டு போய் தள்ளி நிப்பாட்டுங்கள் என்று வாகன ஓட்டிகள் கோவமாக திட்டிக்கொண்டே கடந்து சென்றனர். அரசு பேருந்துகள் மூலம் மக்களின் உயிர்களில் விளையாடிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் மதுரையிலும் பல்வேறு அரசு பேருந்துகள் ஓட்டையை உடைசலாக உள்ளதாக மக்கள் புலம்பி வரும் சூழ்நிலையில் இந்த நிகழ்வு மேலும் அரசு பேருந்துகள் மீதான மக்களின் கோபத்தை அதிகப்படுத்தி உள்ளது.