புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-02-17 11:36 GMT
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கோரிக்கைளை வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் ஏ.ரெங்கசாமி விளக்கவுரையாற்றினார். மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓப்பந்த தினக்கூலி அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரந்தர ஊழியர்களை கொண்டு பணியமர்த்த வேண்டும்.  பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் துணைத் தலைவர்கள் எஸ்.தமிழ்வாணன், டி.ரவிச்சந்திரன், பி.முருகன், ஏ.ஆர்.கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News