உசிலம்பட்டி யூனியன் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டி யூனியன் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்;
Update: 2023-12-22 11:38 GMT
கண்டன ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை மாவட்டம் பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள யூனியன் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு முறைப்படுத்தப்பட்ட ஊதியம் குழு காப்பீடு அரசாணையின்படி பதவி உயர்வு வழங்குதல் தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களில் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.