சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞருக்கு அரசு மரியாதை

பள்ளிபாளையம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர் உடலுக்கு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Update: 2024-05-22 16:18 GMT

உடல் உறுப்பு தானம் 

நாமக்கல் மாவட்டம்,=குமாரபாளையம் அடுத்துள்ள ரங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் வயது 21 கல்லூரி படிப்பு முடித்த இவர் கடந்த ஞாயிறன்று இரவு வெப்படை அடுத்துள்ள ரங்கனூரில் இருந்து வெப்படை செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்பொழுது எலந்த குட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பிரசாந்தின் இருசக்கர வாகனம் மீது மோதியதில், தூக்கி வீச பட்டு படுகாயம் அடைந்த பிரசாந்தை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டதை யடுத்து அவருடைய குடும்பத்தாரின் விருப்பத்திற்கேற்ப பிரசாந்தின் உடல் உறுப்புகள் சேலம் அரசு மருத்துவமனையிலேயே தானம் செய்யப்பட்டது.

இந்த உடல் உறுப்புக்கள் சென்னை மற்றும் மதுரையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது... இதனை அடுத்து உடல் உறுப்புகள் தானம் பெற்ற பிறகு சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தலைமை மருத்துவர்கள் செவிலியர்கள் பிரசாந்தின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து அவருடைய உடல் பிரசாந்தின் சொந்த ஊரான ரங்கனூர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இதில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி அரசு சார்பில் பிரசாந்தின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிரசாந்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிகழ்வில் எலந்த குட்டை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன், வெப்படை புற காவல் நிலைய போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்று பிரசாந்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News