உடல் உறுப்பு தானம் செய்த இளம் பெண்ணுக்கு அரசு மரியாதை
பள்ளிபாளையம் அருகே மூளை சாவடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது.;
Update: 2024-05-03 02:48 GMT
சஞ்சீவ் விகாசினி
பள்ளிபாளையம் ஒன்றியம் புதுப்பாளையம் கிராமம், ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் விகாஷினி (வயது 19) உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஈரோடு தனியார் மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார். மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதன் காரணமாக மூளை சாவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. சஞ்சீவ் விகாசினியின் உடலுக்கு வருவாய் கோட்டாட்சியர் மலர்வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார்...