நாமக்கல்: பெண்கள் தங்கும் விடுதி இடம் தேர்வு

நாமக்கல் நகரில் விடுதி அமையும் பட்சத்தில் பணி செய்யும் பெண்கள், கணவரால் கைவிடப்பட்டு வேலை தேடுவோர் போன்றோர், அதிகபட்சமாக, மூன்றாண்டு வரை குறைந்த வாடகையில், இந்த விடுதியில் தங்க அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது

Update: 2024-06-15 14:41 GMT

தங்கும் விடுதி

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், சமூக நலத்துறை சார்பில் 'பணி செய்யும் பெண்களுக்கான விடுதி' உள்ளது. இங்கு, குறைந்த மாத வாடகையில் தங்கிக் கொள்ளலாம். நாமக்கல் மாவட்டத்தில், இதுபோன்ற விடுதி இல்லை.

இந்நிலையில் நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள பழைய கால்நடை மருத்துவமனை வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பணிக்கு செல்லும் மகளிருக்கான தங்கும் விடுதி அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை மற்றும் சமூக நலத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் நகரில் விடுதி அமையும் பட்சத்தில் பணி செய்யும் பெண்கள், கணவரால் கைவிடப்பட்டு வேலை தேடுவோர் போன்றோர், அதிகபட்சமாக, மூன்றாண்டு வரை குறைந்த வாடகையில், இந்த விடுதியில் தங்க அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடுதியில் சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, லிஃப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் பாக்ஸ், மைக்ரோவேவ், வாட்டர் கூலருடன் கூடிய ஆர்ஓ வாட்டர் போன்றவை உள்ளன. அதோடுகூட சிசிடிவி கேமராக்கள் என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் உள்ளது. குடும்பங்கள்/உறவினர்களுக்கு அவ்விடத்தில் தங்குவதற்கான விடுதி வழங்கப்படுவதில்லை.

Tags:    

Similar News