பதட்டமான வாக்குச் சாவடிகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு

சீர்காழியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, காவல் கண்காணிப்பாளர் மீனா ஆய்வு.

Update: 2024-03-15 10:54 GMT

அதிகாரிகள் ஆய்வு

2024 ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதி நாளை தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட உள்ளது. இதன் இடையே மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

சீர்காழி தென்பாதி வி.தி.பி. நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படுவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் சென்ற தேர்தலில் 50 சதவிதத்திற்கு குறைவான வாக்கு எண்ணிக்கை கொண்ட மையத்தையும் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து சீர்காழி அடுத்த மேலையூர் சீனிவாசா மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி, மணி கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி ஆகியவற்றிலும் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தனர். வாக்குச்சாவடிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News