நீட் தேர்வில் சாதித்த அரசு பள்ளி மாணவர்கள் - ஆட்சியர் வாழ்த்து
நீட் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.;
Update: 2024-06-14 06:01 GMT
ஆட்சியருடன் மாணவர்கள்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இராஜபாளையம் பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன்படி, நீட் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் இராஜபாளையம் பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளியில் பயின்று தனது முதல் முயற்சியிலேயே முதல் இடம் பிடித்த எஸ்.சஞ்சய் ராஜ் என்ற மாணவரும், இரண்டாவது முயற்சியில் முதலிடம் பிடித்த எஸ்.சிவபிரியேசன் என்ற மாணவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலனை சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றனர்.